Abstract
இலக்கணத்தைப் பிழையின்றியும் புரியும்படியாகவும் மாணவர்களுக்குக் கற்பிப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பெரியது. ஆகவே, ஆசிரியரின் கற்றல் கற்பித்தலை விளைபயன்மிக்கதாய் அமைத்துக் கொள்ளவும் இலக்கணக் கற்றலைக் குறிப்பாகப் பெயரெச்சம் கற்றலை ஆர்வமூட்டும் வகையில் கொண்டு செல்லவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெயரெச்சம் கற்றலில் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கான காரணங்களைக் கண்டறியும் நோக்கத்திலும் திரைப்பட உத்தியைப் பயன்படுத்தி பெயரெச்சம் கற்றலை மேம்படுத்தும் நோக்கத்திலும் இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்டது. இவ்வாய்வுக்கான தரவுகளைத் திரட்ட பள்ளி ஆசிரியர்கள் நேர்காணல் செய்யப்பட்டனர். மேலும், பதினைந்து மாணவர்களுக்குக் கேள்வி நிரல் வழங்கப்பட்டு மாணவர்களின் சிக்கலுக்கான காரணங்கள் அடையாளம் காணப்பட்டன. மாணவர்களின் ஆளுமையை அறிய முன்னறித் தேர்வும் செய்யப்பட்டது. தொடர்ந்து, திரைபடங்களில் உள்ள வசனங்களையும் பாடல்களையும் நகைச்சுவைகளையும் பயன்படுத்திப் பெயரெச்சம் கற்றல் மேற்கொள்ளப்பட்டுப் பின்னர், பின்னறித் தேர்வு வழங்கப்பட்டு மாணவர்களின் மேம்பாடு அறிப்பட்டது. இலக்கணம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு இந்த ஆய்வுக் கட்டுரை பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது. [One of vital role of language teachers is teaching students to understand grammar accurately. Therefore, the study was undertaken to make the teachers’ learning effective and to make grammar learning particularly noun learning. The paper was written to identify the causes of students' problems in learning adjectives and to promote learning adjective using film technique. School teachers were interviewed to collect data for this study. In addition, fifteen students were given a questionnaire and the causes of the problem were identified. A pre-test were given to determine the status of the respondents. Subsequently, after the adjective learning was done using the subtitles, songs and jokes in the films, a post-test was given and the student's improvement was well seen. It is hoped that this study will be useful for teachers who teach grammar.]
Published Version
Talk to us
Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have