Abstract

பொதுவாக நாட்குறிப்பு என்பது ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் அன்றாட நிகழ்வுகளை ஓர் ஏட்டில் குறித்து வைத்தல் அல்லது பதிவு செய்தல் எனக் கருதலாம். அவ்வகையில், உலகிலேயே நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடி எனப் புகழப்பெற்றவர் ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு ஆவார். இவருக்கு அடுத்தப்படியாகப் புகழப்படும் பெருமைக்குரியவர் தமிழில் நாட்குறிப்பினை எழுதிய ஆனந்தரங்கப்பிள்ளை என்று கூறினால் அது மிகையாகாது. ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பினைச் ‘சொஸ்த லிகிதம்’ அல்லது தினப்படி என்ற சொற்களால் குறிப்பிடுகிறார். ஆனந்தரங்கர் என்பவர் 18ஆம் நூற்றாண்டு காலத்தில் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் பெரியத் துபாசியாகவும், வணிகராகவும் திகழ்ந்தவர். இவர் வாழ்ந்த காலக் கட்டத்தில் நிகழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் செய்திகளை 25 ஆண்டுக் கால நாட்குறிப்பாக்கிய மாமனிதர். எனவே, இவர்  ‘நாட்குறிப்பு வேந்தர்’ என மக்களால் புகழப்படுகிறார். இவரின் நாட்குறிப்பு மூலம் 18ஆம் நூற்றாண்டுக் கால தமிழகம் முழுமையும் அறிய முடிகிறது. மேலும், இவரின் ஆளுமைத் திறன் என நோக்கும் போது கம்பெனியின் பொது முகவர், துவிபாசி வாணிகர், விவசாயிகளின் தளபதி, அரசியல் ஆலோசகர், பன்மொழி அறிவோர் மற்றும் திவன் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அவ்வகையில், இதுப் போன்ற சிறந்த ஆளிமைத் திறமையின் காரணமாகவே துவிபாசி பணியில் இவர், திவான் பதவி வரை உயர்ந்துள்ளார் என்பதைக் கருத முடிகிறது. எனவே, ஆனந்தரங்கர் பற்றியும், 18-ஆம் நூற்றாண்டுக் கால வரலாறுப் பற்றியும் பின்வரும் தலைமுறைகள் அறிந்து கொள்வது அவசியம் எனக் கருதும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது. எனவே, ஆனந்தரங்கர் பற்றியும் 18ஆம் நூற்றாண்டுக் கால வரலாறுப் பற்றியும் பின்வரும் தலைமுறைகள் அறிந்து கொள்வது அவசியம் எனக் கருதும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது. [A journal defined as a document that records news and events of a personal nature. Samuel Pepesu and ‘Anandarangapillai’ are the big names in the field of journalism.   ‘Anandarangapillai’ used the term of ‘Sostha Ligitham’ and ‘Thinappadi’ in his daily diary basis. He records all important historical event of the year range of 25 years and well knows with a nickname namely, ‘Natkurippu Venthar’. ‘ Anadarangapillai’ conceptualized as a competent man with many roles such as ‘Thivipasi’, ‘Entrepreneur’, ‘Head of Farmer’, and so on. Therefore, this study discuss about ‘Anandarangapillai’  and the history of 18th century.]

Full Text
Published version (Free)

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call