Abstract
This paper is an analytical study of the twenty songs in Puranaanooru; which belong to the subdivision Makatpaarkaanji. The subject matter in the songs need to be studied in detail to know the social history of the early Tamils. This attempt throws light in the plurality and division in the Dravidian society; the fight for supremacy amongst the venthar and velir and the part played by kizhars the native people of the Tamil land. The twenty songs form the primary sources and the other lyrics in the eight anthologies form the secondary sources. It is evident that out of the total; 70% of the Chieftains were demanding the girls for themselves are Venthar and 10% of them are warriors. The remaining are left unidentifiable. 70% of the girls demanded are the daughters of velirs; 10% of them are daughters of the downtrodden venthar and 5% of them are daughters of the kizhars. The remaining are unidentifiable. All the velirs, downtrodden venthar and the kizhars were reluctant to give their daughters in marriage to the venthars. To prove their supremacy the venthar did not hesitate to set ablaze the paddy fields and their hamlets. Key Words: Puranaanooru, Makatpaarkaanji; Venthar; Velir, Kizhars. ஆய்வுச்சுருக்கம் புறநானூற்றில் இடம் பெறும் 20 மகட்பாற்காஞ்சிப் பாடல்களைப் பகுத்து ஆய்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். அப்பாடல்களே முதல்நிலைத் தரவுகளாகின்றன. பிற சங்க இலக்கியப் பாடல்கள் துணை ஆதாரங்களைத் தருகின்றன. 20 பாடல்களிலும் பண்டைத் தமிழகத்தின் சமூக வரலாறு பற்றிய பல உண்மைகள் பொதிந்து உள்ளமை கூர்ந்து நோக்கின் புலனாகின்றன. பன்முகப் பாங்குடைய அச்சமூகத்தில் வேந்தர்க்கும், வேளிர்க்கும் இடையில் நிகழ்ந்த அதிகாரப் போட்டியும்; அவர்களுக்கிடையே கிழார் ஊடாடிய பங்கும் புலனாகின்றன. 70% வேந்தரும், 10% பிற வீரரும் பெண்கேட்போராக இருக்கின்றனர். எஞ்சியவற்றில் யார் பெண் கேட்பவர் என்பதற்கு அடையாளம் இல்லை. 70% வேளிர் பெற்ற பெண்களையும், 10% நலிந்த வேந்தரின் பெண்களையும், 5% கிழாரின் மகளையும் மகட்கொடை நேர்ந்துள்ளனர். எஞ்சியவற்றில் யார் என்ற ஆதாரம் இல்லை. வேளிர், நலிந்த வேந்தர், கிழார் அனைவரும் வேந்தருக்குப் பெண்கொடுக்க ஒப்பவில்லை. வேந்தர் வேளிரின் வயல்களையும், கிழாரின் ஊர்களையும் தீக்கிரையாக்கத் தயங்கவில்லை. குறிப்புச் சொற்கள்: புறநானூறு, மகட்பாற்காஞ்சி, வேந்தர், வேளிர், கிழார் .
Talk to us
Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have
Disclaimer: All third-party content on this website/platform is and will remain the property of their respective owners and is provided on "as is" basis without any warranties, express or implied. Use of third-party content does not indicate any affiliation, sponsorship with or endorsement by them. Any references to third-party content is to identify the corresponding services and shall be considered fair use under The CopyrightLaw.